tamilnadu

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

சென்னை, டிச.27 - தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனி யார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.

விஜயகாந்துக்கு கடந்த மாதம் 18 ஆம் தேதி காய்ச்சல், இருமல், சளி தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், அடுத்த சில நாட்களில் நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டதால் அவரால் இயல்பாக சுவாசிக்க முடியவில்லை.

இதையடுத்து நுரையீரல் ஆதரவு சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்டு, தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். பிறகு படிப்படியாக நலம் பெற்றார்.  மருத்துவ சிகிச்சைகள் முடிந்து டிச.11  அன்று விஜயகாந்த் வீடு திரும்பிய தாக மியாட் மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் மரு.  பிரித்வி மோகன்தாஸ் தெரிவித் திருந்தார்.

இந்த நிலையில், விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (டிச.26) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, விஜயகாந்த் 19 நாள்களுக்குப் பிறகு வழக்க மான பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அழைத்து வரப்பட்டுள் ளார். பரிசோதனை முடிந்து, வியாழக் கிழமை (டிச.28) வீடு திரும்புவார் என்று தேமுதிக சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.