tamilnadu

img

 வள்ளலார் பிறந்தநாள் விழா  இலவச மருத்துவ முகா

 வள்ளலார் பிறந்தநாள் விழா  இலவச மருத்துவ முகா

;' கள்ளக்குறிச்சி, அக்.5-  உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் கிராமத்தில் வள்ளலார் 203வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. அருட்பிரகாச ஜோதி வள்ளலார் கல்வி அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை இணைந்து வெள்ளையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஏற்பாடு செய்த இந்த முகாமை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிக்கண்ணன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீபாரத், சங்கராபுரம் துணைத் தலைவர் இதயத்துல்லா, மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன், விசிக மாவட்ட செயலாளர் அறிவுக்கரசு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் இளையராஜா, காங்கிரஸ் கட்சித் தலைவர் நல்ல.குழந்தைவேலு, ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் ரமேஷ்பாபு, ஒன்றிய கவுன்சிலர் ரஜினி, வட்டாரத் தலைவர் ஷேக் ஜவாத், ஊராட்சி உறுப்பினர் ஹரிகிருஷ்ணன், ஊராட்சி துணைத் தலைவர் சரண்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை வள்ளலார் கல்வி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் பேராசிரியர் கணையார்.சீனிவாசன் செய்திருந்தார்.