1ம் பக்கத் தொடர்ச்சி...
கைக்கூலிகள் என்று சொல்கிறார்கள். மாவோயிஸ்ட்டுகள் என்று அடையாளப்படுத்து கிறார்கள். தீவிரவாதிகள் என்று விமர்சிக்கிறார்கள். இப்படிப்பட்ட முத்திரை குத்தி கொச்சைப்படுத்தக் கூடிய சூழ்நிலையைத் தான் நாம்என்று இந்த உண்ணாநிலைப் போராட்டத்தின்மூலமாகக் கண்டித்துக் கொண்டிருக்கிறோம். வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டுவருவதால் எவ்விதப் பயனும் இல்லை. ஆகவே அவற்றைத் திரும்பப் பெற வேண்டும். அதுதான் விவசாயிகளுடைய கோரிக்கை; நம்முடைய கோரிக்கை; மக்களுடைய கோரிக்கை என்பதையும் எடுத்துச் சொல்லி, அவற்றைத் திரும்பப் பெறுகிற வரையில் நம்முடைய போராட்டங்கள் தொடரும்; வேறு கட்டங்களில் அவற்றை முடிவு செய்து அறிவித்து நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் விவசாயப் பெருங்குடி மக்களைச் சேர்ந்த நம்முடைய தோழர்கள் இதுவரையில் 21 பேர் அதிர்ச்சியிலும், தற்கொலை செய்து கொண்டும் மாண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்திய அளவில் இருக்கக்கூடிய விவசாய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் வருகிற 20-ஆம் தேதி அஞ்சலி செலுத்த முடிவு செய்துள்ளனர். இன்று நாம் இந்தப் போராட்டத்தை நடத்துகின்ற காரணத்தால், நாமும் அதில் பங்கேற்றிட வேண்டும். அனைவரும் அமைதியாக எழுந்து நின்று 2 நிமிடம் மறைந்த அந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் போராட்டத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மதிமுகபொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ்கட்சியின் முன்னாள் தலைவர் கே. வி. தங்கபாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் அப்துல் ரகுமான், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர்பாரிவேந்தர், கொங்கு நாடு மக்கள் தேசியகட்சி தலைவர் ஈஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், பேரா. சுப. வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், திருச்சி சிவா (திமுக) பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன் (சிபிஎம்), செல்வராஜ் (சிபிஐ), ஜெயக்குமார் (காங்கிரஸ்), நவாஸ்கனி (முஸ்லீம் லீக்) உள்ளிட்டோரும் பேசினர்.திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைவர் களுக்கு பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்துப் பேசினார்.