tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ரேசனில் தடையின்றி  பருப்பு, பாமாயில்!
சென்னை, மே 17- மாநிலம் முழு வதும் பல பகுதி களில் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப் பாடு உள்ளதாக புகார் எழுந்த நிலை யில், தமிழ்நாட்டில் நடப்பு மாதத்துக் கான (மே) துவரம் பருப்பு மற்றும் பாமா யில் ரேசன் கடைகளில் தடையின்றி கிடைக்கும் என தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே மாதத்திற்கு வழங்குவதற்காக ரூ. 419 கோடி மதிப்பீட்டில் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு, 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில்  புல்லட் ரயில்!
சென்னை, மே 17- தமிழ்நாடு மற்றும்  கர்நாடகா வில் உள்ள 9 நிலையங்கள் வழியாக சென்னை, பெங்களூரு மற்றும் மைசூரு ஆகிய நகரங்களை இணைக் கும் வகையில் புல்லட் ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ராஜா முத்தையா ரோடு - சென்ட்ரல் ரயில் நிலையம் இடையே இந்த புல்லட் ரயில் நிலையம் அமையவுள்ள நிலையில், சென்னையில், முழுக்க முழுக்க அண்டர் கிரவுண்ட் முறையில் இந்த ரயில் திட்டம் அமைக்கப்படும்; இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் இந்த வருடம் தொடங்கும்; சென்னை சென்ட்ரல் அருகே, பூந்தமல்லி, அரக் கோணம், சித்தூர், பங்காரப்பேட்டை, பெங்களூரு, சென்னபட்னா, மாண்டியா மற்றும் மைசூரு மார்க்கம் வழியாக இந்த ரயில் பயணிக்கும்; அதிகபட்ச வேகம் 350 கி.மீ என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவகாசத்தை நீட்டித்தது  பள்ளிக் கல்வித்துறை!
சென்னை, மே 17- தமிழ்நாட்டில் ஆசி ரியர் பொது இடமாறு தல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற் கான கால அவ காசத்தை மே 25 வரை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க  மே 17 கடைசி நாளாக அறிவிக்கப் பட்டிருந்த நிலை யில் விண்ணப்பிக்காத ஆசிரியர் களுக்கு கலந்தாய்வு வாய்ப்பளிக்கப் படாது என்று கூறப்பட்டி ருந்தது. அந்த வகையில், இதுவரை 66 ஆயிரத்து 433 ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப் பித்துள்ள நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் முன்கூட்டியே திறக்கப்படுகிறதா?
சென்னை,  மே 17- தமிழ்நாட்டில் பள்ளிகளில் இறுதித்  தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப் பட்டுள்ளது. வழக்க மாக மே மாதத்தில் விடுமுறை விடப் பட்டு ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப் படுவது வழக்கம்.

முன்னதாக வெயிலை பொறுத்து ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டி ருந்தது. ஆனால் தற்போது கோடை மழை பெய்து வருவதால் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க ஆலோசனை நடந்து வருகிறது. மே மாத இறுதியில் உள்ள சூழலை பொறுத்து பள்ளிகள் திறக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ராஜேஷ் தாஸ் கைதுக்கு உச்சநீதிமன்றம் தடை!
சென்னை, மே 17 - பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், விழுப்புரம் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்த தைத் தொடர்ந்து, முன்னாள் சிறப்பு  டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த முறையீடு பேலா திரிவேதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், ராஜேஷ் தாஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதாடினார். விசாரணையின் முடிவில், ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்துள்ளது .

;