மூச்சுக்காற்று மூலம் ஸ்மார்ட்போன்களை திறக்கலாம்!
மூச்சுக்காற்றை பயன் படுத்தி ஸ்மார்ட்போன் களை திறப்பது (unlock) தொடர்பான ஆய்வில் சென்னை ஐஐடி-யை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கைரேகைகள் (Fingerprint), முகம் அடையாளம் காணுதல் (Face recognition), கருவிழி ஸ்கேனிங் (Iris recognition) மற்றும் குரல் ஸ்கேனிங் (Voice recognition) போன்ற பயோமெட்ரிக் (biometric) தொழில்நுட்பத்தை பயன் படுத்தி கணினி மற்றும் ஸ்மார்ட்போன்களை திறக்கும் முறைகள் ஏற்கனவே நடைமு றையில் உள்ளது. இந்த நிலையில் மூச்சுக்காற்றை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை திறப் பது (unlock) மற்றும் அதன் பாதுகாப்பான வழிமுறைகளை கண்டறியும் ஆய்வில் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொருவரின் மூச்சுக்காற்றிலும் தனித்துவமான ஏற்ற, இறக்க வேறுபாடு காணப் படுவதாகவும், இதன் அடிப்படையில் இந்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்ததா கவும் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா தலைமையில் சென்னை ஐஐடி மாணவர்கள், மூச்சுக்காற்றை பயன்படுத்தும் பயோமெட்ரிக் கையொப்ப முறையை உருவாக்கியுள்ளனர். அதற்கென 94 நபர்களிடமிருந்து சுவாச மாதிரிகளை சேகரித்து இதன் அல்காரிதத்தை (Algorithm) ஆய்வு செய்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் 97% துல்லியத்துடன் சம் பந்தப்பட்ட நபரின் அடையாளத்தை சரியாக உறுதிப்படுத்தியதை கண்டறிந்துள் ளனர். எனினும் அடையாளம் குறிப்பிடாமல் ஒருவரின் மூச்சுக்காற்றை செலுத்தும் போது, இதன் துல்லியம் 50% ஆக குறைந்தது. எனவே இதன் துல்லியத்தை மேம்ப டுத்தி, அதன் பாதுகாப்பான வழிமுறைகளை கண்டறிவதற்கான ஆய்வுகளை தற்போது ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் உட்பட 12 இந்திய மொழிகளில் இயங்கும் செயற்கை நுண்ணறிவு தளம்!
தமிழ் உட்பட 12 இந்திய மொழிகளில் இயங்கும் ‘Ask QX’ என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை QX லேப் ஏஐ எனும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. உலகின் முதல் ஹைப்ரிட் ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு தளமான ‘Ask QX’ இல் சுமார் 100 மொழிகளில் பயனர்கள் இத னோடு தொடர்பு கொண்டு, தங்களுக்கு வேண் டிய தகவல்களைப் பெற முடியும். இதில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி, மராத்தி, உருது, குஜராத்தி, ஒடியா, பஞ்சாபி மற்றும் அஸ்ஸாமி ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், அரபு, பிரஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், ஜப்பானிய, இத்தாலி யன், கொரியன், போர்த்துகீஸ், ரஷ்யன், சிங்க ளம் உள்ளிட்ட மொழிகளில் தகவல்கள் பெற முடியும். சுகாதாரம், கல்வி மற்றும் சட்ட சேவை கள் உட்பட பல்வேறு துறைகள் தொடர்பான தகவல்களை இந்த தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இந்தியாவில் ‘Ask QX’ தற்போது இணை யம் மற்றும் மொபைல் செயலியாக பயனர்க ளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஆடியோ, வீடியோ மற்றும் படங் களை ப்ராசஸ் செய்யும் அம்சங்களும் அறிமு கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 நிமிடங்களில் 100% பேட்டரி சார்ஜ்!
மின்சார வாகனங்களில் உள்ள லித்தியம் அயன் (Lithium-ion) பேட்டரிகளை, வீடுகளில் வைத்து சார்ஜ் செய்ய 40 மணி நேரத் திற்கு மேல் ஆகும். வேகமான வணிக சார்ஜர்கள், பேட்டரியை 30 நிமி டங்களில் சார்ஜ் செய்துவிடும். இந்த சூழலில், அமெரிக்காவின் கோர்னெல் பல்கலைக்கழகத்தின் (Cornell University) பேராசிரியர் லிண்டென் ஆர்ச்சர் தலைமையிலான ஆய்வுக் குழு புதிய லித்தியம் பேட்டரியை உருவாக்கியுள்ளது. அந்த பேட்டரி 5 நிமிடங்களில் 100% சார்ஜ் ஆகக்கூடியதாக உள்ளது. இந்த லித்தியம் பேட்டரியில், சோலார் பேனலில் (Solar panel) பயன்படுத்தப்படும் indium anodes பொருத்தப்பட்டுள்ளதால், இது வேகமாக சார்ஜ் செய்யக் கூடியதாய் இருக்கிறது. இந்த indium கனமான உலோகமாக இருக் கும் நிலையில், இதன் தன்மை கொண்ட மாற்று உலோகங்களை யும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
வாட்ஸ்அப் வெப்பில் ‘சாட் லாக்’
விரைவில் வாட்ஸ்அப் வெப்பில் (WhatsApp Web) ‘சாட் லாக்’ (Chat Lock) வசதி வெளியாக உள்ளது.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ் மொபைல்களில் வாட்ஸ் அப் செயலியில் சாட் லாக் அம்சம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வாட்ஸ் அப் வெப்பில், தனிப்பட்ட சாட்களை மற்றும் ரகசிய விவரங்களை, மாற்றவர்கள் பார்க்க முடியாத வகையில் ‘சாட் லாக்’ (Chat Lock) வசதியை அறிமுகப்படுத்த உள்ளது மெட்டா நிறுவனம். இந்த அம்சம் விரைவில், பயனர்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும்.