போரூர், ஜூன் 24- முகப்பேரைச் சேர்ந்தவர் லிங்கதுரை (21) பால் வியா பாரி. திங்களன்று (ஜூன் 24) அதிகாலை வேலப்பன் சாவடியில் உள்ள கடைக்கு பால் பாக்கெட்டுகளை கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வானகரம் அருகே சென்ற போது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக லிங்கதுரை வாகனத்தின் மீது மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கிய லிங்க துரை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து லிங்கதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.