tamilnadu

img

தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு அஞ்சலி

தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு அஞ்சலி

மறைந்த தலைவர் தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் படத்திற்கு விழுப்புரம் மாவட்டக்குழு அலுவலகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம்.பாண்டி, டி.ரவீந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கீதா உட்பட ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், கேரளா மாநில முன்னாள் முதலமைச்சருமான தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன்  மறைவுக்கு இரங்கல் தெரிவித்து புதுச்சேரி அண்ணா சிலை எதிரே நடைபெற்ற புகழஞ்சலி கூட்டத்திற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் வெ.பெருமாள், சிபிஐ மாநிலச் செயலாளர் சலீம், முன்னாள் மாநிலச் செயலாளர் நாரா.கலைநாதன், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், விசிக மாநிலச் செயலாளர் தேவப்பொழிலன், தமிழ்மாறன், அமுதன், சிபிஐ (எம்.எல்.) நிர்வாகி விஜயா, சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் இரா. ராஜாங்கம், தமிழ்ச்செல்வன், சீனுவாசன், கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, பிரபுராஜ், சத்தியா உள்ளிட்ட இடை கமிட்டி செயலாளர்கள் ஜோதிபாசு, ராம்ஜி, ராமமூர்த்தி, அன்புமணி, சரவணன், மாநிலக் குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு அச்சுதானந்தன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருகம்பாக்கம் பகுதி, அண்ணா மெயின் தெரு ஏ, பி கிளைகள் சார்பில், சத்யா நகரில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ரெங்கசாமி, பகுதிக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், கந்தன், கிளைச் செயலாளர்கள் டி.ஆறுமுகம், ஏ.பெருமாள் உள்ளிட்டோர் பேசினர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் நடைபெற்ற தோழர் அச்சுதானந்தன்  இரங்கல் கூட்டத்தில் கட்சியின் மூத்த தோழர் கே.செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஏ.ஜி.கண்ணன்,  வட்டச் செயலாளர் என்.கங்காதரன், மாவட்ட குழு உறுப்பினர் த.கன்னியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.