போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
திருவண்ணாமலை, ஆக. 18- அரசு போக்குவரத்து தொழிலாளர்க ளுக்கு ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதி யம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி திருவண்ணாமலை சிட்கோ பணி மனை முன்பு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சிஐடியு, அரசு போக்கு வரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர் நல அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சிஐடியு போக்குவரத்து கழக ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எ.சேகர், ஓய்வு பெற்றோர் அமைப்பு நிர்வாகிகள் ஆர். நாராயணன், கே .நாகராஜ் சம்மேளன நிர்வாகி எஸ். முரளி ஆகியோர் தலைமை தாங்கினர். அரசு போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகிகள் எஸ் .பாலதண்டாயுதம், எஸ். வடிவேல், எஸ். பிரபாகரன், வெங்க டேசன், தாமோதரன், ஏழுமலை, மழையூர் குப்புசாமி, கல்யாணராமன், முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழுப்புரம் விழுப்புரத்தில் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கம் மற்றும் அரசு போக்கு வரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் நல அமைப்பினர் தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள 25 மாத கால பணப்பலன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் ஓய்வு பெறும்போது போக்குவரத்து தொழிலாளர்களை வெறும் கையோடு அனுப்புவதை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்கம் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக கடலூர் பணிமனை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஜி.பாஸ்கரன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் டி.பழனிவேல் தொடங்கி வைத்து பேசினார்.