விழுப்புரம், டிச. 27- பத்திரிகை தகவல் அலுவலகத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் பத்திரிகை யாளர்களுக்கான பயிலரங்கம் நடைபெற் றது. பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென் மண்டல தலைமை இயக்குநர் மாரியப்பன் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பேசினார். இந்த பயிலரங்கத்தில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து பத்திரிகை யாளர்களும் கலந்து கொண்டனர். இதில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் தபால் துறை அலுவலகம் சார்பில் மத்திய அரசில் வழங்கப்படும் மக்களுக்கான திட்டங்கள் பற்றியும், புள்ளியியல் துறை சார்பில் மக்களிட மிருந்து சேகரிக்கப்படும் புள்ளி விவரங்கள் குறித்தும் பத்திரிகையாளர்களுக்கு நேரடி யாக மின்னொளி திரை மூலம் விளக்கப் பட்டது. தேசிய சமூக பொருளாதார பதிவேடு கணக்கெடுப்பு குறித்த விளக்கங்களும் பத்திரி கையாளர்களுக்கு அளிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் புள்ளியியல் துறை அதிகாரி செந்தில், அதிபதி சுப்பிரமணியன்,முருகன், சஞ்சய் கோர்ஸ் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.