tamilnadu

img

தலித் மக்களுக்கு முடிவெட்டியவரை ஊரைவிட்டு ஒதுக்கி சித்ரவதை.... கர்நாடகத்தில் சாதி ஆதிக்க வெறியர்கள் அராஜகம்

பெங்களூரு:
தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு முடிதிருத்தம் செய்த சவரத் தொழிலாளியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததுடன், அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்த கொடுமை கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.

மைசூரு மாவட்டத்தின் நன்ஜன்குட் தாலுகாவிலுள்ள ஹல் லாரா கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜூன் ஷெட்டி (47). சவரத் தொழிலாளியான இவர், தனது கடையில் சாதிய பாகுபாடு அல்லாமல், தலித்துக்கள், பழங்குடிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் முடிதிருத்தம் செய்து வந்துள்ளார்.இதனை ஏற்க முடியாத, ‘நாயக்’சமூகத்தைச் சேர்ந்த மகாதேவா நாயக், சங்கரா மற்றும் சிவராஜூ உள்ளிட்டோர், இனிமேல் தலித் - பழங்குடி வகுப்பினருக்கு முடிதிருத்தக் கூடாது அல்லது முடிவெட்ட ரூ. 300, முகம்மழிக்க ரூ. 200என கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.ஆனால் இந்த இரண்டையுமே மல்லிகார்ஜூன ஷெட்டி ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால்ஆத்திரமடைந்த நாயக் சமூகத்தினர், கிராமப் பஞ்சாயத்தைக் கூட்டிமல்லிகார்ஜூன ஷெட்டி குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததுடன், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளனர். அத்துடன் மல்லிகார்ஜூன ஷெட்டியின் 21 வயது மகனைகடத்திச் சென்று வலுக்கட்டாயமாகமது அருந்த வைத்து, நிர்வாணமாக படம் பிடித்துள்ளனர். இவர் களாகவே மிரட்டி, ‘நாயக்’ சமூகத்தினரைப் பற்றி கேவலமாக பேசவைத்துள்ளனர்.

இதுபோல மல்லிகார்ஜூன ஷெட்டி கடந்த 3 மாதங்களாக பல்வேறு வகைகளில் சித்ரவதை அனுபவித்து வந்துள்ளார். காவல்ஆய்வாளர், வட்டாட்சியர் ஆகியோர் புகார் அளித்தும் அவருக்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தற்போது ஊடகங்கள் முன்பு கொட்டி கண்ணீர் விட்டுள் ளார். இது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

;