tamilnadu

img

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், அக். 11-  சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலங்களில் முன்கள பணியாளர்களாக பணி செய்த பணியாளர்களுக்கு அரசு அறிவித்த மூன்று மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில், மாவட்டத் தலைவர் எஸ்.காமராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஓஎச்டி ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநில ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகி ஆறுமுகம், முன்னாள் மாவட்டச் செயலாளர் கலியமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் தனுஷ்கோடி, சிஐடியு மாவட்டச் செயலாளர் அனிபா, மாவட்டப் பொருளாளர் கஜேந்திரன், உள்ளாட்சி மாவட்டச் செயலாளர் முரளி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.