சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர அரசு நோட்டீஸ்
ஐதராபாத்:
அமராவதியில் ஓடும், கிருஷ்ணா நதிக்கரை யில் சட்டவிரோதமாக வீடு கட்டியதாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‘இங்கு வீடு கட்ட எந்த முறையான அனுமதியும் பெறவில்லை. இது முற்றிலும் சட்டத்துக்குப் புறம்பானது. இன்னும் 7 நாள்களுக்குள் வீட்டைக் காலி செய்ய வேண்டும்’ என நோட்டீ
சில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து உயரும் பெட்ரோல்,டீசல் விலை
சென்னை:
பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 11 காசுகளும் அதிகரித்துள்ளன.தொடரும் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுகின்றனர்.பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினமும் நிர்ணயிக்கின்றன. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் அதிகரித்து ரூ.73.01 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்து ரூ.67.81 காசுகளாகவும் உள்ளது.