tamilnadu

img

சென்னை விரைவு செய்திகள்

தீக்கதிர் செய்தி எதிரொலி - கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு

கிருஷ்ணகிரி, அக்.16 - சூளகிரி வட்டம் உத்தனப்பள்ளி ஆரம்பச் சுகாதார நிலையம் முன்பு குட்டையாகக் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம், தொற்று நோய் பரவும் அபாயம் இருந்தது. உடனடியாகத் தூர்வாரி சுத்தம் செய்திட வலியுறுத்தி தீக்கதிர் செய்தி வெளியிடப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆரம்பச் சுகாதார நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. அரசு அதிகாரிகள் உறுதி அளித்தபடி தற்போது குட்டையாகக் கழிவுநீர் தேங்கி நின்ற இடமும், கால்வாய் முழுவதும் தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன.