tamilnadu

img

திரையரங்குகள் திறப்பு:நெறிமுறை வெளியீடு...

சென்னை:
நவம்பர் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. 

இதைத்தொடர்ந்து திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறை களை வெளியிட்டுள்ளது. அதில், திரையரங்கு களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதி.  திரையரங்க வளாகத்திற்குள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.  அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும்.முகக்கவசம் அணியாதவர் களை திரையரங்கினுள் அனுமதிக்கக்கூடாது. திரையரங்குக்கு வெளியேயும், பொது இடங்களிலும் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும்.  காட்சி நேரங்களுக்கு இடையே போதுமான இடைவெளி அளிக்க வேண்டும்.  ஒவ்வொரு காட்சி முடிந்த பின்னும் திரையரங்கு மற்றும் வளாகம் முழுவதும்கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும். கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் திரையரங்குகளை திறக்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.