வியாழன், ஜனவரி 28, 2021

tamilnadu

img

எரிசாராயம் ஏற்றிவந்த வேன் கவிழ்ந்து விபத்து

திருவ்ணணாமலை, ஏப்.25-திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சியை அடுத்த பெரியகுளம், கெங்கம்பட்டு ஏரிக்கரை பகுதியில் எரிசாராயம் ஏற்றிச் சென்ற மினி வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் தப்பிஓடியதை அடுத்து கடலாடி காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மவாட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட காஞ்சியை அடுத்த கெங்கம்பட்டு ஏரிக்கரை அருகே, மினி வேன் ஒன்றில் சுமார் 1700 லிட்டர் எரிசாராயம் ஏற்றிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மினி வேன் ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தை இயக்கி ஓட்டிய ஓட்டுநர் அந்த வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தலைமறைவானார்.பின்னர் அவ்வழியாக சென்ற சிலர் கடலாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர், வாகனத்திலிருந்த ஐம்பது கேன்களை சோதனை செய்ததில், எரிசாராயம் இருப்பதை கண்டுபிடித்தனர். பின் னர், திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு தகவல் அனுப்பினர். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வாகனத்தையும் எரிசாராய கேன்களையும் கைப்பற்றி எங்கிருந்து ஏற்றி வரப் பட்டது என விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

;