tamilnadu

img

லாரி கவிழ்ந்து விபத்து 2 பேர் பலி: 17 பேர் படுகாயம்

கரூர், மே 10- குளித்தலை அருகே வாழைக்காய் பாரம் ஏற்றி வந்த லாரி வாய்க்காலுக்குள் கவிழ்ந்ததில் இரு தொழிலாளர்கள் பரிதாபமாக இறநதனர். மேலும் 11 பேர் படுகாய மடைந்தனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோவிந்தனூர், மேலநங்கவரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 11 பெண் தொழிலாளர்கள் உட்பட 19 பேர் வாழைத்தார்களை ஏற்றிய லாரியில் வியாழக்கிழமை மாலை குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆதிநத்தம்- நடுப்பட்டி சாலை மருதூர் அருகே வாய்க்கால் பாலத்தை கடக்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென வாய்க்காலுக்குள் கவிழ்ந்தது. விபத்தில் கோவிந்தனூரைச் சேர்ந்த ஜெய்சங்கர்(50), மேலநங்கவரத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் அரவிந்த்(19) உட்பட 19 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ஜெய்சங்கர், அரவிந்த் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இச்சம்பவம் குறித்து குளித்தலை காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.