அம்பத்தூர், ஜூன் 24- தனியார் நிறுவன பேரு ந்து டீ கடைக்குள் புகுந்ததில் அங்கிருந்த 3 பேர், மற்றும் தனியார் பேருந்தில் பய ணம் செய்த ஊழியர்கள் 17 பேர் காயமடைந்து மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அம்பத்தூரில் இருந்து வானகரம் செல்லும் சாலை யில் கலைவாணர் நகர் சந்திப்பு அருகே டீ கடை வைத்திருப்பவர் பாண்டியன் (60). இந்நிலையில் அம்பத் தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஏசிஎல் நிறுவனத் தின் பேருந்து, பெண் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு அம்பத்தூரில் இருந்து புறப்பட்டது. கலை வாணர் நகர் சந்திப்பு அருகே சென்று கொண்டிருக்கும் போது, முன்னால் சென்று கொண்டிருந்த காரின் பின்னால் இடித்துவிட்டு, பாண்டியன் டீ கடைக்குள் பேருந்து புகுந்தது. இதில் டீ கடை தரைமட்டமானது. மேலும் டீக்கடையில் இருந்த பாண்டியன் மனைவி தமிழ்செல்வி, கடைக்கு வந்த ஒருவர், மற்றும் தனியார் நிறுவன பேருந்து ஓட்டுநர் உட்பட 17 பேர் காயமடைந் தனர். படுகாயமடைந்த அனைவரையும் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர் மீட்டு கீழ்ப் பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவம னையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் தமிழ்செல்வி மிகவும் ஆபத் தான நிலையில் உள்ளார். மேலும் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீய ணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, டீ கடையின் இடிபாடுகளை அகற்றி வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என தேடி னர். பின்னர் பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத் தினர். அம்பத்தூர், அயப் பாக்கம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்வதாலும், கனரக வாகனங்களும், தண்ணீர் லாரிகளும் அதிகளவில் செல்வதாலும் இந்த சாலை எப்போதும் போக்கு வரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. எனவே காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து காவல் துறை யினரை நியமித்து போக்கு வரத்தை சீரமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.