tamilnadu

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு படை!

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 170 வகையான உபகரணங்களுடன் 986 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளன – டிஜிபி சங்கர் ஜிவால்

அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டிஜிபி சங்கர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் உள்ளன.

அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை சார்பில் கட்டுபாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

112,1070, 9445869843,9445869848 ஆகிய எண்களில் கட்டுபாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் – டிஜிபி