எண்ணூர், நெட்டுக்குப்பம் மாநகராட்சி அரசு பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்களின் ஒயிலாட்டம், பறையாட்டம், கும்மி போன்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கிட்டிப்புள்ளு, பாண்டி, தட்டாங்கல், தாயம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை மாணவர்கள் விளையாடி னர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் லெஸ்லி, கலை பயிற்றுநர்கள் வினோத், சேகுவேரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.