1 ஆம் பக்கத் தொடர்ச்சி....
தனியார் முதலாளிகளுடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆட்களை நியமிப்பது விபத்து ஏற்படுவதுடன், மின்வாரிய விநியோகப்பிரிவிலும் தனியாரிடம் கொடுக்கும் நடவடிக்கையாக மாறும்.
தொழிற்சங்கங்களுடன் கடந்த 22.2.2018ல் ஏற்படுத்தப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத் தின் அடிப்படையில் ரூ.380 தினக்கூலியாக வழங்க வேண்டும் என்ற ஷரத்து உள்ள பொழுது, அதை பல ஆண்டுகளாக இயற்கைப் பேரிடர் காலத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்காமல் யாரோ ஒரு தனியார் கார்ப்பரேட் கம்பெனிக்கு விடுகின்ற நடவடிக்கை தனியார்மயத்தின் மோகத்தில் தான் நடைபெறுகிறது என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் தமிழக அரசு
முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சர் ஆகியோர் மின்வாரியம் தனியார்மயமாகாது எனச்சொல்லி வருகிறார்கள். ஆனால் அதன்கட்டமைப்பை, மின் உற்பத்தியை, துணை மின் நிலையங்களை தனியாரிடம் கொடுப்பதும் தற்போது விநியோகப் பிரிவில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுப்பதும் தனியார் மயம் இல்லையா?அரசு ஆணை 950-நாள் 8.8.90ன்படி, மின்வாரியத்தில் ஒப்பந்த முறை தடை செய்யப்பட்ட பகுதிகளில் இவ்வாறு தனியாரை ஈடுபடுத்துவது அரசு உத்தரவை அரசே மீறும் ஏற்பாடு அல்லவா?அத்தியாவசியத் துறையான மின்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது தனியாருக்கு மின்வாரியத்தை தாரை வார்ப்பதைத் தவிர வேறு என்ன நோக்கம் இருக்க முடியும் உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றில் தனியாரிடம் இரண்டுஆண்டுகள், மூன்று ஆண்டுகளில் கொடுத்தபின் மின்வாரியம் தனியாரிடம் போகாது என முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள்.
கேங்மேன் பதவியும் வழக்கும்
கேங்மேன் பதவி உருவாக்கிய பொழுது,தொழிற்தகராறு சட்டத்தின்படி தொழிற்சங் கங்களோடு கலந்து பேசி உருவாக்கி இருக்கவேண்டும். 5,000 கேங்மேன் பதவிகள் நிரப்பும்பொழுது 5,000 பதவிகள் (கள உதவியாளர்) ஒழிக்கப்படும் என உத்தரவு வெளியிட்ட காரணத்தாலும் பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டும் தான் தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்திற்கு சென்றன.தற்போது மின்வாரிய நிர்வாகம் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், தொழிற் சங்கத்தின் ஆலோசனையையும் பெற்று ஒருமித்த கருத்தை ஏற்றுக்கொள்கின்ற வகையில்உருவாக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை. ஆனால் நிர்வாகம் இது தொடர் பாகப் பேச மறுக்கிறது.உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கின்ற பொழுது, அனைத்து நடவடிக்கையும் எடுத்த நிர்வாகம் தற்போது நியமன உத்தரவு வழங்கும் பொழுது மட்டும் தொழிற்சங்கத்தை காரணம் காட்டுவது தவறானது. அரசு மற்றும் வாரியத்தின் நோக்கமே கேங்மேன் பதவியை நிரப்புவதற்கு பதில் ஒப்பந்த முறையில் தனியாரிடம் போக வேண்டும் என்பதுதான்.
உதய் திட்டம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழக மின்வாரியத்தை உதய் திட்டத்தில் இணைக்கமாட்டேன் என உறுதியாக சொன்னார். ஆனால் அம்மா அரசு எனக் கூறி வரும்தற்போதைய ஆட்சியாளர்கள் உதய் திட்டத்தில் இணைந்தது மட்டுமல்ல, மின்வாரியத்தை தனியார்மயமாக்க மத்திய பாஜக அரசுக்கு ஒத்துழைப்புத் தர தவமிருந்து வருகிறார்கள்.தமிழக அரசு உடனடியாக தலையீடு செய்து வாரியத்தின் இந்த உத்தரவுகளை திரும்பப்பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம் முழுவதும் போராட்டம்
இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் டிசம்பர் 21 திங்களன்று காலை முதல் மின்வாரிய ஊழியர்கள் அனைத்து சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு தலைவர்கள் தலைமையில் காலை துவங்கி தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, உபகோட்ட அளவில் தனியார் நிறுவனங்கள் மூலம் மின்வாரியத்தில் ஹெல்ப்பர் மற்றும் வயர்மேன் பணியிடங்களை தேர்வு செய்வது என்ற அரசாணை திரும்பப்பெறப்படுவதாக அறிவித்தார். மேலும் துணைமின்நிலையங்களை தனியாருக்கு கொடுக்கும் முடிவையும் திரும் பப்பெறுவதாக அறிவித்தார். இது தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் தெரிவித்துள்ள எஸ்.ராஜேந்திரன், மின்ஊழியர்களின் இதர கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.