tamilnadu

img

நீலகிரியின் முதல் காவல் நிலையம் புதுப்பிக்கப்பட்டு காவலர்களின் குழந்தைகள் காப்பகமாக திறப்பு!

நீலகிரியின் முதல் காவல் நிலையம் புதுப்பிக்கப்பட்டு காவலர்களின் குழந்தைகள் காப்பகமாக திறப்பு

உதகை, அக்.4- உதகையிலுள்ள 150 ஆண்டு கள் பழமையான நீலகிரியின் முதல் காவல் நிலைய கட்டிடம், புதுப்பிக் கப்பட்டு காவலர்களின் குழந்தை கள் காப்பகமாக சனியன்று திறந்து வைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை நகரில் 1860 ஆம் ஆண்டு ஆங்கிலே யர் காலத்தில் காவல் நிலையம் ஒன்று கட்டப்பட்டது. இந்த காவல் நிலையம் நீலகிரியின் முதல் காவல்  நிலையமாக ஒரு ஆய்வாளர் மற் றும் 55 காவலர்களுடன் செயல்பட தொடங்கியது. சுதந்திரத்திற்கு பிறகு உதகை நகர மத்திய காவல் நிலையமாக செயல்பட்டு வந்த நிலையில், 2005 ஆம் ஆண்டு இந்த கட்டிடத்தை இடித்து புதிய கட்டி டம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அப்போது வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த காவல் நிலைய கட்டி டத்தை இடிக்கக்கூடாது என எதிர்ப் புகள் எழுந்ததையடுத்து, இந்த கட் டிடத்தின் அருகே புதிய கட்டிடம் கட்டப்பட்டு, 2016 ஆம் ஆண்டு  புதிய கட்டிடத்தில் காவல்  நிலையம் செயல்பட தொடங்கி யது. இந்நிலையில், 150 ஆண்டு காலம் பழமை வாய்ந்த காவல் நிலைய கட்டிடத்தை, உதகை நக ரில் பணியாற்றும் காவல் துறையின ரின் குழந்தைகளை பராமரிக்கும் காப்பகமாக மாற்ற முடிவு செய்யப் பட்டு அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. குறிப்பாக, குழந்தைகளை கவரும்  வகையில் சுவர்களில் கார்ட்டூன் சித் திரங்கள், வண்ண ஓவியங்கள், வன விலங்குகள், இயற்கை காட்சிகள் என அனைத்தும் தத்ரூபமாக வரை யப்பட்டன.  இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், காப்பகத்தை மேற்கு மண்டல காவல் துறைத்தலைவர்  செந்தில்குமார், நீலகிரி மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா ஆகியோர் சனியன்று திறந்து வைத்து பார்வையிட்டனர். அப் போது காப்பகத்திலுள்ள விளை யாட்டு உபகரணங்களில் குழந்தை கள் விளையாடுவதையும் பார்த்து  மகிழ்ந்தனர். காப்பகம் காலை 8:30 மணி முதல் மாலை 4.30 மணி  வரை செயல்படும் என்றும், குழந் தைகளை கவனித்துக் கொள்ள இரண்டு பெண் காவலர்கள் மற்றும் இரண்டு பெண் ஊர்காவல் படையி னர் பணியில் ஈடுபடுத்தப்படுவார் கள் என அதிகாரிகள் தெரிவித்த னர். இதைத்தொடர்ந்து நீலகிரி  மாவட்டத்தில் முதல் முறையாக  பெண்கள் மற்றும் குழந்தைக ளுக்கு எதிரான குற்றங்களை தடுக் கும் வகையில் ‘பிங் பேட்ரோல்’ (pink patrol) என்ற பெண் காவலர் கள் இரு சக்கர ரோந்து வாகனங்க ளையும் ஐஜி செந்தில்குமார் கொடி சைத்து துவக்கி வைத்தார். இந்த ‘பிங்க் பேட்ரோல்’ பெண் காவலர் கள் காலை 8 மணி முதல் 11 மணி  வரையிலும், மாலை 3 முதல் இரவு 7 மணி வரை பள்ளி, கல்லூரிகள் தொடங்கும் முடியும் நேரங்களி லும் ரோந்துப்பணியில் ஈடுபடுவார் கள். ரோந்துப்பணியில் ஈடுபடும் பெண் காவலர்களுக்கு கேமரா, ஒலிபெருக்கி போன்றவை வழங்கப் பட்டன.