சென்னையில் நடைபெற்ற தனியார் யூடியூப் சேனலின் நிகழ்ச்சியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அமமுக-டிடிவி.தினகரன், தமாகா - வாசன் கலந்து கொண்டனர்.
நிர்மலா சீதாராமன் பேசுகையில், “500 ரூபாய் கொடுத்தார்கள், பிரி யாணி கொடுத்தார்கள், மது பாட்டில் கொடுத்தார் கள் என நாம் வேறு யாருக் காவது ஓட்டு போட்டோம் என்றால் வல்லரசு அல்ல. புல்லரசாகவே இருப்போம்.
இன்னொருவர் போட்ட பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை. வெள்ளமா இந்தா ஆயி ரம் ரூபாய் எடுத்துக்கோ.. வீடு இடிஞ்சி விழுந்து போச்சா இந்தா 500 ரூபாய் எடுத்துக்கோ.. என்று சில கட்சிகள் மக்களை டீல் செய்கின்றன. இந்த கட்சிகள் ஆட்சியில் இருந்தால் நாடு முன்னே றாது” என்று கூறினார்.
நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரு கின்றன. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ள தமிழக அமைச்சர் மனோ தங்க ராஜ், “பட்டினியை அனுபவித்தவனுக்குதான் பசியின் கொடுமை புரியும்.வெயிலின் கொடு மையைப் பார்த்தவனுக்குதான் கூரையின் அருமை தெரியும். மானம் மறைக்க கந்தல் ஆடை இல்லாதவனை இழிவாக பார்ப்பவர் களுக்கு ஏழையின் வறுமை புரியாது.நிர்மலா சீதாராமனின் ஆணவம் ஏழைகளை முன்னேற்றாது” என்று சாடியுள்ளார்.