தமிழகத்தில் கடந்த 26 ஆம் தேதி கரையை கடந்த நிவர் புயல் பாதிப்புகளை டிச.1ஆம் தேதி மத்தியக் குழு ஆய்வு செய்யவுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைஅச்சுறுத்தி வந்த நிவர் புயல் 26 ஆம் தேதி அதிகாலை கரையை கடந்தது. இது கரையை கடக்கும் போது 19 கி.மீ அளவில் சூறாவளி காற்று வீசியது. கடலூர், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் புயல் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
புயல் பாதித்த பகுதியில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தமிழக அரசால் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கிடையே நிவர் புயல் கரையை கடந்து சில மணி நேரத்துக்குள்ளாகவே அதன் பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற் காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 26 ஆம் தேதி கடலூரில் ஆய்வு செய்தார். புயலால் சார்ந்த வாழைகள் போன்றவற்றை பார்வையிட்டு, உயிரிழந்த 4 பேர் குடும்பங்களுக்கும் தலா 10 லட்சம் வழங்க உத்தரவிட்டார். சேதமடைந்த பகுதிகளில் பொற்கால அடிப்படையில் சீரமைக்க பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்புகளை டிச.1ஆம் தேதி மத்தியக் குழு ஆய்வு செய்கிறது.
நவம்பர் 30 ஆம் தேதி தமிழகம் வரும் மத்தியக்குழு டிசம்பர் 1ஆம் தேதி நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்யவுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் மத்திய குழு ஆய்வு நடத்தவுள்ளது. 7 அதிகாரிகள் கொண்ட மத்திய குழுவினர் நாளை மறுநாள் தமிழகம் வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் அசுதோஸ் அக்னிகோத்ரி தலைமையிலான குழு ஆய்வை மேற்கொள்கிறது. மத்திய குழு அளிக்கும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கப்படும்.