tamilnadu

img

பிரபீர் புர்காயஸ்தாவை விடுதலை செய்க!

பிரபல எழுத்தாளர் ஊடகவியாளர் பிரபீர் புர்காயஸ்தா அவர்களது ‘கீப்பிங் அப் த குட் ஃபைட் (keeping up the good fight ) ‘ நூல், போராட்டம் தொடர்கிறது’ என்ற தலைப்பில் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் சிறப்புரை ஆற்றிய அவர், உலக பத்திரிகை சுதந்திரம் குறித்த தர வரிசையில் 2013இல் 180 நாடுகளில் இந்தியா 140வது இடத்தில் இருந்தது. இப்போது 2023இல் 161வது இடத்திற்கு சரிந்துள்ளது என்றார்.

  பிரபீர் புர்காயஸ்தா மீதான வழக்கு, அரசியல் காரணங்களுக்காக ஜோடிக்கப்பட்டது என்று சாடிய அவர், ஊடகங்களை முடக்கும் ஒன்றிய ஆட்சியாளர் நோக்கங்களை அம்பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  மறைக்கப்படும் நெவில் ராய் சிங்கம் செய்தி அறிக்கையை சுட்டிக்காட்டிய அவர்,   தனது தாட்வொர்க்ஸ் மென்பொருள் நிறுவனத்தை விற்றுக் கிடைத்த பெருநிதியில் இருந்து முற்போக்கு சிந்தனையோடு மக்கள் நலனில் இயங்கும் நிறுவனங்களில் நெவில் ராய் சிங்கம் முதலீடு செய்தார்.

ரிசர்வ் வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்த பரிமாற்றங்கள் இவை.  இந்த தகவல்களை ஒரு சில இதழ்கள் தவிர யாரும் வெளியிடவில்லை என்பதையும் ராம் சுட்டிக் காட்டினார். எளிய மக்களுக்காகக் குரல் எழுப்பும் நியூஸ் கிளிக் ஏடு செய்து வரும் பணிகளை முடக்கவே அதன்மீது முறையற்ற அத்துமீறல் ரெய்டுகள், கணினி எந்திரங்கள் பறிமுதல், மணிக்கணக்கில் ஊழியர்களை அடைத்து வைத்து விசாரணை, பிரபீர் புர்காயஸ்தா அமித் சக்கரவர்த்தி இருவரும் கைது, பின்னர் சக்கரவர்த்தி அப்ரூவர் ஆக்கப்பட்டிருப்பது என்று நடந்த நிகழ்ச்சிப் போக்குகளை விவரித்த ராம், இந்த அராஜக நடவடிக்கைகளில் இருந்து பிரபீர் புர்காயஸ்தா நிச்சயம் வெளியே வருவார், போராட்டம் நிச்சயம் தொடரும் என்றார். விரைந்து புத்தகத்தை தமிழில் அருமையாகக் கொண்டு வந்துள்ள பாரதி புத்தகாலயம் நாகராஜனையும், மொழி பெயர்ப்பாளர் சுப்பாராவையும் அவர் பாராட்டினார்.

நூலை வெளியிட்டுப் பேசிய நீதியரசர் கே.சந்துரு, 2024 தேர்தல்களில் நாம்  செய்ய வேண்டியது என்ன என்பது இந்தப்  புத்தகத்தை வாசித்தால் தெளிவாக இருக்கிறது என்றார்.

 “உறுப்பினர்கள் பற்றியோ, நிதி கணக்கு கள் பற்றியோ யாருக்கும் எந்த விவரங் களும் சொல்லத் தேவை இல்லை என்றபடி ரகசியமாக இயங்கும் ஆர் எஸ் எஸ் பிடியில் உள்ளது ஒன்றிய ஆட்சி. சமய நல்லிண க்கத்தைப் பிளக்கும் அரசியலை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இந்தியாவா, பாரதமா என்பது தான் கேள்வி, பாரதம் என்கிற பெயரில் ஆட்சேபம் இல்லை, ஆனால் அதன் பின்னால் அவர்கள் வைக்கும் கருத்தி யல் தான் ஆபத்தானது, அதை முறியடித்திட வேண்டும், இந்தப் புத்தகம் தொடர்ச்சியான வரலாற்றின் பின்புலத்தில் நாம் ஆற்ற வேண்டிய கடமையைச் சொல்கிறது” என்றார். 

ஏன் சிறையில் இருக்கிறார் பிரபீர்? 
 

“இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்கு  கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன், ஆனால் இங்கே இருக்க வேண்டிய புத்தக ஆசிரியர் சிறையில் இருக்கிறார், அவர் தோழர் பிரபீர் புர்காயஸ்தா”, என்றார் லெஃப்ட் வேர்டு பதிப்பாளர் சுதன்வா தேஷ்பாண்டே!

 “அவர் ஏன் சிறையில் இருக்கிறார் எனில், அவர் ஒரு நேர்மையான குடிமகனாக இருக்கிறார், அதிகாரத்திற்கு நேர் நின்று உண்மையைப் பேசுகிறார். நீதி கேட்டுப் போராடும் மாணவர்கள், தொழிலாளிகள், விவசாயிகள் பக்கத்தில் நிற்கிறார். அதனால் தான் சிறையில் இருக்கிறார்.

  “ஒரு பொறி யாளராக, ஓர் அறிவியலாளராக, அணு ஆற்றல் குறித்து அறிந்தவராக, மக்கள் நலனுக்காகக் களத்தில் ஏராளமான பணி கள் ஆற்றியவராக நாங்கள் நீண்டகாலம் அறிந்திருக்கும் மனிதரை வெளியே வர முடியாத கெடுபிடிகள் நிறைந்த சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர், ஆனாலும், போராட்டம் தொடர்கிறது என்பது தான் அவரது குரலாக இங்கே இந்தப் புத்தகம் தமிழிலும் வெளியாகி இருப்பது நம்பிக்கை அளிக்கிறது” என்றார்.

விடுதலை செய்
சிறப்புரை ஆற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன், நியூஸ் கிளிக் நிறு வனத்திற்கு எதிரான விசாரணையில், குடி யுரிமை சட்டத்திற்கு எதிராக எழுதினீர்களா? சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த சிறுபான்மை இஸ்லாமியருக்கு ஆதரவாக எழுதினீர்களா?  ஓராண்டாக தலைநகரில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு ஆதர வாக எழுதினீர்களா ? என்ற மூன்று கேள்வி கள் கேட்கப்பட்டன. அதற்கும் அவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் பண மோசடி வழக்கிற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்றார்.  பிரபீர் புர்காயஸ்தா, மாணவப் பரு வத்தில் இருந்தே இடதுசாரி கருத்தியல் பால் ஈர்க்கப்பட்டு போராட்டங்களில் ஈடுபட்டவர். சிறந்த சிந்தனையாளர்.  அறிவியல் இயக்க செயல்பாட்டாளர். நுட்பமான விஷயங்கள் மீது எளிமையான கட்டுரைகள் வழங்கியவர். பாதிப்புற்ற மக்கள் பக்கம் நின்று குரல் கொடுத்த காரணத்தால் பழி வாங்கப்பட்டு இருக்கிறார்.  அவரது புத்தகத்தை அனை வரும் வாங்கி வாசிக்க வேண்டும். இது நூல் வெளியீட்டுக் கூட்டம் மட்டுமல்ல, அவரது விடுதலைக்கான குரல் எழுப்பும் கடமையை யும் இங்கே நாம் ஆற்றுகிறோம் என்றார். கடி னமான கருப்பொருளைக் கூட எளிமை யான மொழியில் படைத்த நூலை அதே எளி மையில் வழங்குவது சவாலாக இருந்தது, மன நிறைவோடு செய்து முடித்த பணி என்று  குறிப்பிட்டார் மொழி பெயர்ப்பாளர் க.சுப்பா ராவ். நிகழ்வுக்கு மாற்றத்திற்கான ஊடகவிய லாளர் சங்க நிர்வாகி மு. அசீஃப் தலைமை தாங்கினார். நூலின் முதல் பிரதியை பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் பெற்றுக் கொண்டார். பாரதி புத்தகாலயம் சார்பில் க.நாகராஜன் நன்றி நவின்றார்.

- தொகுப்பு : எஸ்.வி.வேணுகோபாலன்