சென்னை, மார்ச் 4 - சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 26 அன்று திறந்துவைத்தார்.
அதனுடன், கருணாநிதியின் கலை, இலக் கிய, அரசியல் வாழ்க்கை வரலாற்றினைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அந்நினைவிட வளாகத்தில் நிலவறையில் நவீன தொழில்நுட்பங்களுடன் பல்வேறு அரங்கங்களுடன் “கலைஞர் உலகம்” என் னும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த, கலைஞர் உலகம் அருங்காட்சி யகத்தில், கருணாநிதியின் நிழலோவியங் கள், உரிமை வீரர் கலைஞர், கலைஞருடன் ஒரு புகைப்படம், புதிரை வெல் கலைஞர் வழிசெல், அரசியல் கலை அறிஞர் கலைஞர், கலைஞருடன் ஒரு நேர்காணல், நவீனத் தமிழ் நாட்டின் சிற்பி, பண்பாட்டுப் பேழை, கலை ஞரின் வரலாற்றுச் சுவடுகள், கலைஞரின் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள், சரித்திர நாயகனின் சாதனைப் பயணம் போன்ற அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கலைஞர் உலக அருங்காட்சி யகத்தினைப் பார்வையிடுவதற்கு 6.3.2024 புதன்கிழமை முதல் பொதுமக்கள் அனு மதிக்கப்பட உள்ளனர். இதனைப் பார்வை யிடுவதற்குத் தமிழ்நாடு அரசின் https:// www.kalaignarulagam.org/ என்ற இணைய முகவரி (Webportal) உருவாக் கப்பட்டுள்ளது. இந்த இணைய முகவரியில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதிச் சீட்டி னைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதற்கு கட்டணம் ஏதுமில்லை. ஒருவர் ஒரு அலைபேசி எண்ணின் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக் கொள்ள இயலும்.
ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை 6 காட்சிகளாக நடை பெறும் நிலையில், பொதுமக்கள் தங்க ளுக்கு வசதியான காட்சி நேரத்தைத் தேர்வு செய்து முன்கூட்டியே அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம்.