சென்னை:
தமிழகம் முழுவதும் வருகிற 15 ஆம் தேதி முதல் 3,250 டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபார்கள் கடந்த 8 மாதங்களாக மூடிக்கிடக்கின்றன.இதனால் வாடகை பாக்கி மட்டுமே ரூ.405 கோடிக்கு உள்ளதால் டாஸ்மாக் பார்களை திறக்க வேண்டும் என்று பார் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. போராட்டம் அறிவிப்பும் வெளியானது.இதனை தொடர்ந்து டாஸ்மாக் மேலாண் இயக்குனர் மோகன், டாஸ்மாக் பார் உரிமையாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிற 15 ஆம் தேதிக்குள் டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.இதுதொடர்பாக டாஸ்மாக் சங்க தலைவர் அன்பரசன் கூறும்போது, ‘‘வருகிற 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 3,250 டாஸ்மாக் பார்களையும் திறப்பதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளது எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது” என்றார்.