tamilnadu

img

எஸ்.பி.வேலுமணிக்கு தமிழிசை சவுந்தர்ராஜன் ஆதரவு அதிமுக - பாஜக செல்லச் சண்டை!

சென்னை, ஜூன் 6- அதிமுக - பாஜக அவ்வப்போது காட்டமாக பேசிக்கொள்வதும், பின்னர் திரைமறைவில் ஒருவ ருக்கொருவர் ஒத்தாசையாக இருப்  பதும் நீண்டநாள் நடைமுறையாக உள்ளளது. கூட்டணியில் இல்லை  என்று சத்தமாக கூறினாலும், தமிழ் நாட்டின் உரிமைகளை பறிக்கும்  மோடி அரசை, முனகலாக கூட எடப்  பாடி பழனிசாமி எதிர்த்துப் பேச  மாட்டார். நடந்து முடிந்த தேர்தலி லும் சிறுபான்மையினர் வாக்கு களை ஏமாற்றிப் பெற்று, இந்தியா  கூட்டணிக்குச் செல்லும் வாக்கு களை பிரித்து விட முடியாதா, என்ற  நப்பாசையிலேயே அதிமுக தனித்  துப் போட்டியிட்டார்.

தற்போது அதிமுகவும் - பாஜக வும் மீண்டும் தங்களின் செல்லச் சண்டையை ஆரம்பித்துள்ளன.

மக்களவைத் தேர்தல் முடிவு களுக்குப் பிறகு, அதிமுக முன்  னாள் அமைச்சர் எஸ்.பி. வேலு மணி, கோவையில் செய்தியாளர்  களை சந்தித்தார். அப்போது, தமி ழிசை, எல். முருகன் ஆகியோர் மாநி லத் தலைவர்களாக இருந்தபோது  அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த  பிரச்சனையும் இல்லை. அண்ணா மலை தலைவரான பிறகுதான், கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. கூட்டணி முறிவுக்கும் அவர்தான் காரணம்” என்றார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தி ருந்தால் 30-35 தொகுதிகள் வரை அதிமுக வென்றிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அண்ணாமலை லாவணி!

இதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “2019 ஆம் ஆண்டு ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்தது. அப்போது அதிமுக படுதோல்வி அடைந்தது. தனியாக இருந்தபோது அதிமுக  ஒரு சீட்டு கூட பெறவில்லை. அப்படி யிருக்கும்போது ஒன்றாக இருந்தி ருந்தால் 35 சீட்டுகள் எப்படி கிடைத்  திருக்கும்?” என்று கேள்வி எழுப்பி யிருப்பதுடன், “எடப்பாடிக்கும் வேலுமணிக்கும் இடையே உட் கட்சி பிரச்சனை இருப்பது போல்  தெரிகிறது. அதிமுக தலைவர் களை தமிழக மக்கள் நிராகரித்து விட்டனர். இதுதான் தேர்தல் தரும்  பாடம்” என்று தாக்கினார்.

அதிமுக காட்டம்!

இந்நிலையில், அண்ணா மலைக்கு பதிலடிக்கு கொடுக்கும்  வகையில் அதிமுக தொழில்நுட்ப (ஐடி) குழு தனது எக்ஸ் தளத்தில்  வெளியிட்ட பதிவில், “அதிமுக  குறித்து, எடப்பாடி - வேலுமணி குறித்து பேசுவதற்கு அண்ணா மலைக்கு எந்த அருகதையும் இல்லை. தன் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி களைப் பார்க்காமல் அதிமுக பற்றி  மூக்கு வியர்க்க பேசும் அண்ணா மலை, முதலில் தனது பதவியையும்  இருப்பையும் காப்பாற்றிக் கொள்  ளட்டும். ஆடு, ஓநாய், நரி எனது  எது வந்தாலும், எப்படி கொக்க ரித்தாலும் எங்களை அசைத்துக் கூட பார்க்க முடியாது” என்று காட்ட மாக தெரிவித்திருக்கிறது.

வேலுமணி கருத்து உண்மையே: தமிழிசை

இந்தவார்த்தை மோதலுக்கு இடையில், சென்னையில் செய்தி யாளர்களைச் சந்தித்த பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் தமி ழிசை சவுந்தரராஜன், “வேலுமணி கூறியிருப்பது யதார்த்தமான உண்மைதான். அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று யாருமே எங்கள் கட்சியில் சொல்ல முடி யாது. தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும். அதிமுக குறித்த அண்  ணாமலையின் கருத்துக்கு அவரி டமே விளக்கம் பெறுங்கள்” என்று  பின்வாங்கினார்.

ஏமாற்று நாடகம்: ஜோதிமணி!

இந்நிலையில், அதிமுகவின்  வேலுமணிக்கு பாஜகவின் அண்ணாமலை க்கும் இடையே நடக்கும் வார்த்தைப்போர் ஒரு நாட கம். கோவையில் பாஜகவின் அழுத்தத்திற்கு பணிந்து அதிமுக களத்தை விட்டுக் கொடுத்தது என்பதே உண்மை.

இதையெல்லாம் மீறித் தான் ‘இந்தியா’ கூட்டணி மகத்தான  வெற்றியை பெற்றுள்ளது. கோவை யில் அதிமுக - பாஜக மறைமுக கூட்டணியை மறைக்கவும், அப் பாவி அதிமுக தொண்டர்களை ஏமாற்றவுமே இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறது” என்று கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சி  எம்பி செ. ஜோதிமணி விளாசியுள் ளார்.


 

;