tamilnadu

img

மோடியின் ஆட்சியில் தெய்வங்கள் நன்றாக இருக்கும் இடம் தமிழ்நாடு - சு.வெங்கடேசன் எம்.பி

மோடியின் ஆட்சியில் தெய்வங்கள் நன்றாக இருக்கும் இடம் தமிழ்நாடு என
மாற்றுதிறனாளிகள் மாநாட்டு துவக்கவுரையில் சு. வெங்கடேசன் எம் பி தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளை “திவ்யாங்” அதாவது தெய்வத்தின் குழந்தை என்று பெயர் சூட்டினார் பிரதமர் மோடி.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் மாற்றுதிறனாளிகளுக்கான ஒதுக்கீட்டினை 35 சதவிகிதம் குறைத்துள்ளது மோடி அரசு.

மாற்றுதிறனாளிகளுக்கான உபகரணங்களை தயாரிக்கும் ஒன்றிய அரசு நிறுவனமான

அலிம்கோவுக்கு 10 கோடியும், கல்வி உதவித்தொகை 5 கோடியையும் குறைத்துள்ளது மோடி அரசு.

மாற்று திறனாளிகளுக்கான உபகரணங்களுக்கு ஜி எஸ் டி வரிவிதித்து அழகு பார்க்கிறது மோடி அரசு.

தெய்வகுழந்தைகளுக்கு அதிகமான வஞ்சகத்தையையும் அநீதியையும்

நிகழ்த்தியுள்ளது ஒன்றிய அரசு.

கடந்த ஆண்டு

கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை 5 லட்சத்து ஐம்பதாயிரம் கோடி. ஆனால் தெய்வத்தின் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதோ வெறும் 1044 கோடி. உண்மையில்

அவர்களுக்கு தெய்வம் அதானியும் அம்பானியும் தான்.

இந்த பட்ஜெட்டில்

மாற்று திறன் கொண்ட மனிதர்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது 838 கோடி. ஆனால் தெய்வக்குழந்தை என்று சொல்லி ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்தது வெறும் 1044 கோடி. மோடியின் ஆட்சியில் தெய்வங்கள் நன்றாக பார்த்துக்கொள்ளப்படுவதும் பராமரிக்கப்படுவதும் தமிழகத்தில் தான்.

“தெய்வக்குழந்தை” என்று முலாம் பூசும் வேலையை விட்டுவிட்டு மாற்றுத்திறனாளிகளை முன்னேற்றும் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

;