தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இனி நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மனித மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் தமிழ் மொழிதாள் தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயம் ஆக்கப்படுகிறது. தமிழ் மொழித் தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுவதாகவும், மேற்கண்டவாறு நடத்தப்படும் கட்டாய தமிழ் மொழித்தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி கட்டாயம் ஆக்கப்படும் எனவும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வுதாட்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது