tamilnadu

img

ஆளுநருடன் சூரப்பா சந்திப்பு?

சென்னை:
ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆணையத்திடம் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஆவணங்களை ஒப்படைத்த நிலையில்பன்வாரிலால் புரோகித்தை சூரப்பா சந்தித்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன.அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் தொடர்பான விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் நியமனம் செய்யப்பட்டார். அவரும் விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக அலுவலகம் மற்றும் கூடுதல் அதிகாரிகள், பணியாளர்கள் கேட்டு உயர்கல்வித்துறைக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதன்படி, அரசும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது.‌ விசாரணையை மேற்கொள்வதற்காக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள பொதிகை இல்லம் விசாரணை அலுவலகமாக வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக விசாரணையை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் சூரப்பா மீதான விசாரணை தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆவணங்களை கேட்டுள்ளார். மேலும், இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கருணாமூர்த்தி நேரில் ஆஜராக நீதிபதி கலையரசன் சம்மன் அனுப்பியிருந்தார்.அதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக் கழகத்தின் பதிவாளர் கருணாமூர்த்தி அதிகாரிகளுடன் ஆஜரானார். அப்போது சூரப்பா பதவியேற்றது முதல் தற்போது வரை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பணப்பரிவர்த்தனைகள், நியமனங்கள், டெண்டர்கள் உள்பட சில ஆவணங்கள் அடங்கிய 3 பெரிய பெட்டிகளை விசாரணை அலுவலகத்தில் ஒப்படைத்தார். இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த பல்கலைக்கழக பதிவாளர், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து விளக்கம் அளித்ததாகவும். அதன் பின்னர் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது சரியானது அல்ல என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகின்றன.

;