tamilnadu

img

முதல்வர் கோப்பை கூடைப்பந்து போட்டி உற்சாகத்துடன் பங்கேற்ற மாணவர்கள்

முதல்வர் கோப்பை கூடைப்பந்து போட்டி உற்சாகத்துடன் பங்கேற்ற மாணவர்கள்

கோவை, அக்.3- மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான  2  ஆம் நாள் கூடைப்பந்து போட்டியில் பள்ளி மாண வர்கள் உற்சாகத்துடன் கள மிறங்கினர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார் பில் மாநில அளவிலான முதல்வர் கோப்பை 2025 விளையாட்டு போட்டிகள் கோவையில் துவங்கியது. 14 ஆம் தேதி வரை 13 நாட் கள் நடைபெறும் இந்த போட்டிகளில், கூடைப்பந்து மற்றும் கோ-கோ ஆகிய இரு விளையாட்டு போட்டிகள் கோவையில் நடைபெறுகிறது. கோவை வ.உ.சி., விளையாட்டு மைதானத்தில் கூடைப்பந்து போட்டி நடைபெறும் நிலை யில், 7 ஆம் தேதி வரை பள்ளி மாணவ, மாண வியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. 38 மாவட்டங்களில் இருந்து தலா ஒரு மாணவர் மற்றும் மாணவியர் அணி கள் என 76 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். முதற்கட்டமாக, 5 ஆம் தேதி வரை நாக்-அவுட் முறையிலும், 6 ஆம்  தேதி வரை லீக் முறையிலும் இந்த போட்டி  நடைபெறுகிறது.  இரண்டாம் நாள் வெள்ளியன்று நடை பெற்ற போட்டியில், மாணவியருக்கான பிரி வில், தூத்துக்குடி - திருவாரூர் இடையே யான போட்டியில், தூத்துக்குடி அணியும், தேனி - நாமக்கல் இடையேயான போட்டி யில், தேனி அணியும், திருப்பூர் - திரு வண்ணாமலை இடையேயான போட்டி யில், திருவண்ணாமலை அணியும், அரிய லூர் - திருப்பத்தூர் இடையேயான போட்டி யில், திருப்பத்தூர் அணியும், திருநெல் வேலி - சேலம் இடையேயான போட்டியில்,  சேலம் அணியும், சென்னை - திருச்சி இடை யேயான போட்டியில், சென்னை அணியும், கள்ளக்குறிச்சி - தென்காசி இடையேயான போட்டியில், கள்ளக்குறிச்சி அணியும், ஈரோடு - ராமநாதபுரம் இடையேயான போட்டியில், ஈரோடு அணி வென்றது. இதேபோன்று, மாணவர்களுக்கான பிரி வில், சென்னை, செங்கல்பட்டு, நாமக்கல், திருப்பூர், தேனி, கோயம்புத்தூர், தூத்துக் குடி, தஞ்சாவூர் அணி வென்றது.