வாசிப்பு சிறப்பு முகாமில் அசத்திய மாணவர்கள்
சோழிங்கநல்லூர் கடந்து பெரும்பாக்கம் குடியிருப்புப் பகுதியில் உள்ள கற்றல் உதவி மையத்தில் வாசிப்பு சிறப்பு முகாம் கொண்டாட்ட சூழலில் நடைபெற்றது. வார்லி வாசிப்பு வட்ட அன்பர்கள் பாலகுமார், சுதாகர், பிரசாத், ஞானம் ஆகியோர் புத்தகங்களை நேர்த்தியாக அறிமுகப்படுத்தினர். மாணவர்கள் குறும்பும் சிரிப்புமாக மின்னல் வேகத்தில் பதிலளித்து நிகழ்வை சிறப்பித்தனர். கல்வியாளர் நளினி மோகன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன், ஓய்வுபெற்ற அரசு அலுவலர் ராஜி, சுப்புலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் வேர்கள் அமைப்பு சார்பில் மாணவர்களுக்கு புத்தகங்களும் ஜியோமெட்ரி பாக்ஸ்களும் வழங்கப்பட்டன.
