சென்னை,
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவை இடைநீக்கம் செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ஊழல் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்து உள்ளது. இந்நிலையில், மாணவர்களின் நலனுக்கு எதிராக தன்னிச்சையாக செயல்படும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி கிண்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தின் அருகே இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீது ஆசிரியர் பணி நியமனத்தில் 280 கோடி ஊழல் புகார் எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும். அரசு அமைத்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் விசாரணையை குறிப்பிட்ட காலத்துக்குள் முழுமையாக நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.