tamilnadu

மாணவன் முகிலன் மர்ம மரணம்!

மாணவன் முகிலன் மர்ம மரணம்!

உரிய விசாரணை நடத்த சிபிஎம் கோரிக்கை

திருப்பத்தூர், ஆக.14 - திருப்பத்தூரில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் மர்மமான முறையில் மரணம் அடைந்த  மாணவனுக்கு நீதி வழங்க தமிழக அரசு உரிய விசாரணை நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், கொத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னத்தம்பி என்பவரின் மகன் முகிலன் (16). இவர் திருப்பத்தூர் அரசு நிதி உதவி பெறும்  (டோமினிக் சேவியோ) பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இம்மாணவர் ஆறாம் வகுப்பில் இருந்து அதே பள்ளியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி அங்கேயே படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆக.1ஆம் தேதி வகுப்புக்கு செல்லாததால் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதற்கு முகிலனின் தந்தை வீட்டுக்கு வரவில்லை பள்ளியில் தான் இருப்பார் என்று கூறியுள்ளார். உடனடியாக மாண வனின் பெற்றோர்கள்  பள்ளிக்கு சென்று நிர்வாகத்தினரிடம் கேட்டதற்கு தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறி யுள்ளனர். பள்ளி நிர்வாக தரப்பின் பதிலை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர்கள் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் மகனை காணவில்லை என புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறை  பள்ளிக்கு வந்து விசாரித்துள்ளனர். மாண வனின் பெற்றோரும் மூன்றாம் தேதி வரை பள்ளியிலேயே இருந்துள்ளனர். இந்நிலையில் முகிலனின் பெற்றோரை பள்ளியில் இருந்து அப்புறப்படுத்த காவல்துறையினர் பெருமுயற்சி எடுத்துள்ளனர். ஆனால் 2ஆம் தேதி இரவு முகிலனின் பெற்றோரை ஓய்வு எடுங்கள் எனக்கூறி தனி அறையில் விட்டு பூட்டியுள்ளனர். இந்நிலையில் 3ஆம் தேதி விடியற்காலையில் பெற்றோர்களுக்கு உங்கள் மகன் பள்ளிக்குள் இருக்கும் கிணற்றில் சடலமாக இருக்கிறான் எனக்கூறி மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளது எனபெற்றோர் மற்றும் உறவினர்களும்  உடலைவாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சிபிஎம் வேலூர் - திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் எஸ்.டி.சங்கரி விடுத்துள்ள அறிக்கையில் மாண வர் முகிலன் இறப்பில் பள்ளி நிர்வாக மும், காவல்துறையும், மாணவனின் பெற்றோரை அணுகிய விதமும், முகில னின் பள்ளி ஆசிரியர் பள்ளியில் இல்லை என்பதும், அவரது மரணத்தில் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. எனவே திருப்பத்தூர் மாவட்ட நிர்வாக மும், காவல்துறை நிர்வாகமும் மற்றும் தமிழ்நாடு அரசும்எவ்வித பாரபட்சம் இல்லா மல், சமரமும் இல்லாமல், முறையான விசா ரணை நடத்தி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.