சென்னை,ஜன.27- குடியரசு தின விழாவில் சமூக ஆர்வலர்கள் , காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர்க ளுக்கு விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கோட்டை அமீர் விருது முஹம்மது ஜூபைருக்கு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு, தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் கொல்லப் பட்டதாக சமூக வலைத் தளங்களில் செய்தி காட்டு தீயாக பரவியது. இதில் பதற்றம் ஏற்பட்டது. பெரும் கலவரத்தை உருவாக்கும் முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டன. இதை தமிழ்நாடு அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சாதுரியமாக முறியடித்தனர்.
அப்போது, அந்த செய்தி வேறு ஒரு மாநிலத்தில் இருந்து பரப்பியதை ‘ஆல்ட் நியூஸ்’ ஆதாரத்துடன் நிரூபித்தது. பத்திரிகையாளரும், ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனருமான முஹம்மது ஜூபை ரின் துணிச்சலான நடவடிக்கையை பாராட்டிய தமிழ்நாடு முதல மைச்சர், சமூகத்தில் மத நல்லிணக் கத்திற்கு அடையாளமாக திகழும் நபர்களுக்கு வழங்கும் கோட்டை அமீர் விருதுக்கு தேர்வு செய்து குடி யரசுத்தின விழாவில் அந்த விருதும் வழங்கப்பட்டது.
இதனால், ஆத்திர மடைந்துள்ள பாஜக மாநிலத் தலை வர் அண்ணாமலை,அவர் தனது சமூக வலைத்தளத்தில், தனது எரிச்சலை கொட்டித் தீர்த்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் அண்ணாமலைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.