tamilnadu

img

கடலூரில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

கடலூரில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

 தினத்தை முன்னிட்டு கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில், அண்ணா கிராமம் குறுவட்ட மைய அளவிலான தடகள போட்டி நடை பெற்றது. இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், தடை தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. இப்போட்டியை பாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்னபூராணி வரவேற்று பேசினார். மேலும் சிறப்பு விருந்தினராக மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி மகேஷ் குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்  ராஜமாணிக்கம், தூக்கணாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 44 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.