தமிழ்நாடு முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடைபெற்றது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும், RTE மாணவர் சேர்க்கையை மாநில அரசு நடத்த வேண்டும், RTE ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் தொடர்ந்து படிப்பதை உறுதி செய்ய வேண்டும், தனியார் பள்ளிகளில் நடக்கும் கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட முயன்ற சங்கத்தின் மாநிலச் செயலாளர் அரவிந்த்சாமி, அகில இந்திய துணைத் தலைவர் மிருதுளா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.