tamilnadu

img

கவரைப்பேட்டை அரசு பள்ளியில் ஆறாக ஓடும் கழிவுநீர்

கவரைப்பேட்டை அரசு பள்ளியில் ஆறாக ஓடும் கழிவுநீர்

திருவள்ளூர், ஜூன் 30- கவரைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி நுழைவு வாயில் கழிவுநீர் ஆறாக ஓடு கிறது. இதனால் மாணவர்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனை சீர மைக்க வேண்டும் என பெற்றோர்கள் வலி யுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம்,  கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள கவரைப்பேட்டை அரசி னர் மேல்நிலைப் பள்ளியில் 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி யின் நுழைவு வாயில் அருகில் பொது கழிப்பறை உள்ளது. இந்த பொது கழிப்பறையை ஒட்டி இரண்டு கழிவுநீர் தொட்டிகள் உள்ளன. இந்த கழிவுநீர் தொட்டிகள் நிறைந்து பள்ளியின் நுழைவு வாயிலில் பரவி,  ஜிஎன்டி சாலையிலும் வழிந்தோடுகிறது. கழிவுநீர் தொட்டிகள் மண் தூர்ந்து உள்ளதால், கழிவுநீர் அகற்றிய ஒரு வாரத்திற்குள் தொட்டிகள் நிரம்பி வழி கிறது. இதனால் பள்ளி வளாகத்தில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உருவாகி, மாணவர்களுக்கு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் நுழைவு வாயில் முன்பு குப்பை களும் நிரம்பியுள்ளதால் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது.இதனை கீழ்முதலம்பேடு ஊராட்சி செய லர் மற்றும் அரசு அதிகாரிகள் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் வலி யுறுத்தியுள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா?