மாவீரன் பகத்சிங் பிறந்த தினத்தை முன்னிட்டு மரம் கன்றுகள் நடப்பட்டன
விழுப்புரம், செப்.25- செப்.28 மாவீரன் பகத்சிங் பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளியில் வாலிபர் மற்றும் மாணவர் சங்கத்தின் சார்பில் மரம் நடும் நிகழ்வு புதனன்று (செப்.25) நடைபெற்றது. திண்டிவனம் அருகே உள்ள சலவாதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திண்டிவனம் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கா.ரவிச்சந்திரன், மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் மு.ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு அப்பள்ளியின் ஆசிரியர் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டனர். இந்நிலையில் வாலிபர் சங்க வட்டத் துணைச் செயலாளர் எம்.திருமுருகன், மாணவர் சங்க மாவட்ட துணை செயலாளர் உ.தீபன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் மதுமிதா என்.பிரசாந்த், ஆர்.சந்துரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.