மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளோடு ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியாவை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் நேரில் சந்தித்தனர்.
அப்போது அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தென் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கையெழுத்திட்ட கடிதத்தினை ஒன்றிய அமைச்சரிடம் வழங்கினர்.
அதற்கு அவர் மதுரை ஏற்கெனவே கஸ்டம்ஸ் விமான நிலையமாக இருப்பதால் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க முடியாது என்றார். மேலும் “பல வடமாநிலங்களில் ஒரு சர்வதேச விமான நிலையம் தான் இருக்கிறது. தமிழகத்திற்கு நான்காவதாக மதுரைக்கு கேட்பது என்ன நியாயம்? தர முடியாது” விமானத்துறை அமைச்சர் தெரிவிதார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு மட்டும் தமிழகம் செலுத்திய ஜிஎஸ்டி வரி, 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செலுத்திய மொத்த வரியை விட அதிகம்.
நாங்கள் 4 அல்ல… 14 கேட்க உரிமையும், தகுதியும் படைத்தவர்கள் என எதிர்வினையாற்றி உள்ளர்.