பூட்டிய கடையில் கொள்ளை
ராணிப்பேட்டை, ஜூலை 25 - ஆற்காடு அப்பாய் தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் ஆற்காடு ஆரணி சாலையில் மோட்டார் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வியாழனன்று (ஜூலை 24) வேலை முடித்து இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக அருகில் இருந்த வர்கள் தகவல்தெரிவித்தனர். கடைக்கு வந்து கமலக் கண்ணன் பார்த்தபோது, ரூ.3500 பணமும் 60 கிலோ செம்பு ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து ஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.