தீப்பந்தம் ஏந்தி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
41 மாத பணி நீக்க காலத்தை நீதிமன்ற உத்தரவுப்படி பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் தீப்பந்தம் ஏந்தி தர்ணா போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு கோட்டத் தலைவர் கணபதி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பரிதிமால் கலைஞன், நில அளவை அலுவலர் ஒன்றிப்பு மாநிலத் தலைவர் ஜெ. ராஜா, சாலை பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் மா. மகாதேவன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.