காரைக்காலில் சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்க கிளை உதயம்
புதுச்சேரி,செப்.21- புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் சிஐடியு சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை துவக்கவிழா காரைக்கால் நகரத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் தலைவர் சௌரிராஜன் தலைமை தாங்கினார். சிஐடியு தனியார் சாலைப்போக்குவரத்து தொழி லாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் எம்.பி. மதிவா ணன் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு சிஐடியு சங்க அடையாள அட்டையை வழங்கினார்.சங்கத்தின் எதிர்கால கடமைகள் குறித்து சிஐடியு புதுச்சேரி மாநில குழு உறுப்பி னர் மணி பாலன் பேசினார். அகில இந்திய விவசாயிகள் சங்க காரைக்கால் மாவட்ட பொறுப்பாளர் தமீம், கடற்கரை மீனவ மக்கள் வாழ்வுரிமை சங்கத்தின் பொறுப்பாளர் துரைசாமி ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். தீர்மானம் காரைக்கால் மாவட்டத்தில் வாகனங்களுக்கு விதிக்க ப்படும் ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு நல வாரியத்தில் மோட்டார் வாகன தொழிலாளர்களை உறுப்பி னராக சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.