tamilnadu

img

5400 பேர் மீது பழிவாங்கல் நடவடிக்கை சென்னையில் ஜாக்டோ-ஜியோ உண்ணாநிலைப் போராட்டம்

சென்னை, ஜூலை 7 - ஜாக்டோ-ஜியோ ஒருங்கி ணைப்பாளர்கள் உள்ளிட்டு சுமார் 5 ஆயிரத்து 400 ஊழியர்கள், ஆசிரியர்கள் பேர் மீதான பழிவாங்கலை ரத்து செய்ய வலியுறுத்தி ஞாயிறன்று (ஜூலை 7) சென்னை எழிலகம் வளாகத்தில் உண்ணாநிலை அறப் போராட்டம் நடை பெற்றது. பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக தலைவர்களை அழைத்துப் பேசி கோரிக்களை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும். வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவர்கள் மீதான பொய் வழக்கு, பணியிடமாறுதல், பதவி உயர்வு மறுப்பு போன்ற பழிவாங்கலை கைவிட வேண்டும்; தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட கிருஷ்ண கிரி மீன்வள மேற்பார்வையாளர் கா.சின்னசாமிக்கு மீள்பணிய மர்த்த வேண்டும், ஓய்வு பெற்றோருக்கு மறுக்கப்படும் ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும். மாநில ஒருங்கிணைப்பாளர் மு.சுப்பிரமணியன், உயர்மட்ட க்குழு உறுப்பினர் மா. ரவிச்சந்திரன் ஆகியோரது தற்காலிக பணி நீக்கத்தையும், கல்லூரி பேராசிரியர்களின் தொலைதூர பணியிட மாற்றத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இந்தப் போராட்டத்தில் ஜாக்டோ ஜியோவின் மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பாள ர்கள், உயர்மட்டக்குழுவில் உள்ள சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தினிடையே செய்தியாளர்களிடம் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அ.மாயவன், மீனாட்சிசுந்தம், வெங்கடேசன் ஆகியோர் கூறிய தாவது:- ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் அழைத்துப் பேசி, அரசின் நிலையை தெரி வித்தால், அதனை பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம். இதற்கு மாறாக ஊழியர்களை தகுதி இறக்கம் செய்தல் உள்ளிட்ட பழிவாங்கலில் ஈடுபட்டுள் ளனர். அரசாணை, நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, பணி ஓய்வு நாளில் ஜாக்டோ-ஜியோ தலைவர் சுப்பிரமணியத்தை தற்காலிக நீக்கம் செய்துள்ள னர். இதுபோன்ற நடவடிக்கை களை கைவிட வேண்டும். அரசுத் துறைகளில் ஆட்குறைப்பு செய்யும் அரசாணை 56, ஆசி ரியர்களை குறைக்கும் அரசாணை 100, 101 ஆகிய வற்றை ரத்து செய்ய வேண்டும். அரசு அழைத்துப் பேசும் என்று எதிர்பார்க்கிறோம்.  இவ்வாறு அவர்கள் கூறினர். ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.சுப்பிரமணியன், மு.அன்ப ரசு, செய்தித் தொடர்பாளர் கு.தியாகராஜன் உள்ளிட்டு ஏராளமனோர் கலந்து கொண்ட னர்.