tamilnadu

img

வேளாண் சட்டங்களை ரத்து செய்க.... தமிழகம் முழுவதும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்....

தூத்துக்குடி ஆட்சியரகத்தில் ஏர்கலப்பையுடன் முற்றுகை

தூத்துக்குடி/நாகப்பட்டினம்:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி அகிலஇந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப் புக்குழு சார்பில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஏர்கலப்பையுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக்குழு நல்லையா தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாயிகள் சங்க மாநிலபொருளாளர் கேபி பெருமாள் போராட்டத்தை துவக்கி வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கமாவட்ட செயலாளர் கேபி ஆறுமுகம், மாவட்டதலைவர் மணி, பொருளாள‌ர் ராமசுப்பு, துணைத்தலைவர் சீனிவாசன், ராகவன், கிருஷ்ணன், துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன், ந‌ம்பிராஜன், சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.ரசல்,மாவட்ட தலைவர் இரா.பேச்சிமுத்து, மாதர் சங்கம்மாவட்ட செயலாளர் பூமயில், விதொச மாவட்ட செயலாளர் சண்முகராஜ், துணைத்தலைவர் பண்ணீர்செல்வம், தவிச(சிபிஐ) மாவட்ட தலைவர் ராமையா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், மாநகர் செயலாளர் தா.ராஜா, ஒன்றிய செயலாளர் சங்கரன், புறநகர்செயலாளர் பா.ராஜா, விளாத்திகுளம் தாலுகாசெயலாளர் புவிராஜ், ஆழ்வை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், கயத்தார் ஒன்றிய செயலாளர்சாலமன், சிபிஐ மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன் உட்பட நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொன்டனர்.

போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர் களை மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் போலீசார் தடுத்துநிறுத்தினர். இரண்டு மணிநேர வாக்குவாதத்திற்கு பின்பு போலீசார் வயதானவர்கள், பெண்கள் என்று பாராமல் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் திணித்தனர். அரை மணிநேர போராட்டத்திற்கு பின்பு அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு செல்லும் மழை நீர் வெள்ள ஓடையில் விவசாயிகள் மற்றும் மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இறங்கி நின்று மத்திய அரசையும், காவல்துறையும் கண்டித்து கோஷமிட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணுவின் உறவினர் ராமசுப்பு போராட்டத்தில்மயங்கி விழுந்தார். அவரை போராட்டக் குழுவினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போராட்டத்திற்கு ஆதரவாக கோஷமிட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியையும் கைது செய்தனர். 

                                        *******************

விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் அடாவடி : பெ.சண்முகம் கண்டனம்

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தைத் திரும்பபெற வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ‘புரெவி’ புயல், தொடர் கனமழை, வெள்ளம் பாதிப்பில் பயிர் பாதித்த விவசாயிக்கு ரூ.30,000-, விவசாயத் தொழிலாளருக்கு ரூ.5,000-, விழுந்த குடிசைக்கு ரூ.25,000, கல் வீட்டுக்குப் பாதிப்புக் கேற்ப உரிய நிவாரணமும் வழங்கக் கோரி, நாகையில் திங்கட்கிழமை முதல், அனைத்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தொடர் காத்திருப்புப் போராட் டம் துவங்கியது.

நாகப்பட்டினம் அவுரித் திடலில் துவங்கிய தொடர் காத்திருப்புப் போராட்டத்திற்குத் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமை வகித் தார். வி.ச.மாவட்டச் செயலாளர் எஸ்.சம்பந்தம், த.வி.ச. மாவட்டத் தலைவர் எம்.என்.அம்பிகாபதி, காவிரிப் பாசன விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் மு.சேரன், காவிரி விவசாயிகள் பாதுகாப்போர் சங்கம் சார்பில் ஏ.வி.துரைராஜ், வி.சி.க. சார்பில் தலித்.இராமையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் உரையாற்றும் போது, அத்துமீறிச் செயல்படும் காவல் துறையினரைக் கடுமையாக எச்சரித்தார். “ இந்தப் போராட்டம் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்டது. ஆனால், திடீரெனக் காவல்துறையினர் அவுரித் திடலுக்கு இடத்தைமாற்றினர். அதனை ஏற்றுக் கொண்டு, இரவு பந்தல் போடும்போது, பந்தல்போடுவதைத் தடுத்தனர். நாற்காலிகள் போடக் கூடாது என்றும் அடாவடித்தனம் செய்தனர். காவல் துறைக்கு எச்சரிக்கை செய்கிறோம். எப்படிப் போராட்டம் நடத்தவேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவெடுப்போம். காவல்துறை எடுக்க முடியாது” எனச் சாடிவிட்டு, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள் பற்றியும் தில்லியில் லட்சக் கணக்கான விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டம் பற்றியும் சிறப்புரையாற்றினார்.  சிபிஎம் சார்பில் மாவட்டச் செயலாளர் நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து, வி.தொ.ச. மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன், ஒன்றியச் செயலாளர் க.இராஜேந்திரன், மதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் வெ.ஸ்ரீதர்,ஒன்றியச் செயலாளர் க.அய்யாதுரை, சி.பி.ஐ.சார்பில் ஒன்றியச் செயலாளர் வி.ராமலிங் கம்,மாநிலக்குழு உறுப்பினர் நாகூர் தமீமுன் அன்சாரி, வி.ச.மாநிலக்குழு உறுப்பினர் வி.சரபோஜி உள்ளிட் டோர் உரையாற்றினர்.சிபிஎம் நாகை ஒன்றியச் செயலாளர் பி.டி.பகு, நாகை நகரச் செயலாளர் சு.மணி மற்றும் சி.பி.எம்., சி.பி.ஐ.,தி.மு.க. விசிக., ம.தி.மு.க.ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

;