2021 ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அரசு துறைகளில், பல்வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, குரூப் 1 தேர்வு ஜனவரி 3ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தொழில் மற்றும் வர்த்தக உதவி இயக்குநர் பணிக்கான தேர்வு ஜனவரி 9 மற்றும் 10ஆம் தேதி நடைபெறும் என்றும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையில் (ரசாயனப் பிரிவு) உதவி கண்காணிப்பாளர் பணிக்கு ஜனவரி 9 மற்றும் 10ஆம் தேதி தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குரூப் 2 மற்றும் குரூப் 2A, தேர்வுக்கான அறிவிக்கை மே மாதமும், குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வுக்கான அறிவிக்கை செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.