tamilnadu

img

உலக பாரம்பரியப் பட்டியல் பரிந்துரையில் செஞ்சிக்கோட்டை!

சென்னை,ஜன.31- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டை 1510-ம் ஆண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது.  இதையடுத்து, ராஜ கிரி,  கிருஷ்ணகிரி,  சதுரகிரி ஆகிய  3 கோட்டைகள்  இன்றும் கம்பீரமாக  காட்சி அளிக்கிறது.

இந்நிலையில், 2024-25-ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய பட்டியலில் அங்கீ காரம் பெறுவதற்கு தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தின் அருகே செஞ்சிக் கோட்டை உள்ளிட்ட மராத்தா ராணுவ நிலப் பரப்பு காட்சிகள் பரிந்துரைக்கப் படுவதாக ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மராட்டிய மன்னர்கள் ஆட்சியில்  ராணுவ சக்தியின் உத்தியாக பன்னிரண்டு பகுதிகள் இருந்தன. மகாராஷ்டிர மாநிலத்தில் இருக் கும் சன் ஹேர் கோட்டை,  சிவ்னேரி கோட்டை,  லோகாட்,  கந்தேரி கோட்டை,  ராய்காட்,  ராஜ் காட்,  பிரதாப்காட், சுவர்ணதுர்க்,  பன்ஹாலா கோட்டை, விஜய் துர்க்,   சிந்துதுர்க் போன்றவற்றோடு தமிழ்நாட்டில் உள்ள செஞ்சி கோட்டையும் இடம் பெற்றுள்ளது.

இந்தக் கோட்டைகள் மராட்டிய  ஆட்சியில் ராணுவ சக்தியாக இருந்து,  தற்போது 800 ஆண்டு களுக்கு முந்தைய சரித்திரத்தை வெளிப்படுத்துகின்றன.  இந்த 12 புவியியல் மற்றும் நிலப் பகுதி கள் உலகப் பாரம்பரியப் பட்டியலில்  அங்கீகாரம் பெற இந்திய அரசு சார்பில் யுனெஸ்கோவிற்கு பரிந் துரைக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப் பட்டுள்ளது.