tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்காக  ராகுல் - கமல் இணைந்து பிரச்சாரம்!

சென்னை, மார்ச் 27- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்  காந்தியுடன் இணைந்து மக்கள் நீதி மய்  யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்  சாரம் மேற்கொள்ள உள்ளதாக தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல் வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமைய கத்தில் அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசனை செல்வப் பெருந்தகை, மூத்த  தலைவர் கே.வி. தங்கபாலு உள்ளிட்டோர்  சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் செல்  வப்பெருந்தகை கூறும்போது

, “எந்த வித  நிபந்தனையும் இல்லாமல் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு அளித்தமைக்காக கமலுக்கு வாழ்த்து சொல்லுமாறு ராகுல்  கூறியிருந்தார். அதன்படி, தேர்தல் தொடர்  பாக உரையாடினோம்” என்றார். “எந்தெந்த தொகுதியில் பிரச்சா ரத்தை மேற்கொள்வது என்பது குறித்து மேலும் உரையாட இருக்கிறோம்.

விரை வில் கமல்ஹாசனுடன் ராகுல் பேசுவார்”  என்றும், “தமிழ்நாட்டில் ராகுல் காந்தி யும் கமல்ஹாசனும் சேர்ந்து பிரச்சாரம்  மேற்கொள்வது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. இது தொடர்பான விவரங்கள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்” என் றும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள்  3 பேருக்கு சிறை!
இராமேஸ்வரம், மார்ச் 27 - 2023 மார்ச் 15, 17 தேதிகளில், இராமேஸ் வரம் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த  36 மீனவர்களை இலங்கை கடற்படை  கைது செய்திருந்தது. இவர்களில் 33  பேரை ஓராண்டுக்கு பிறகு விடுவித்துள் ளது. அதேநேரம் 3 மீனவர்களில் ஓராண்டு  சிறைத் தண்டனையும், இருவருக்கு 6  மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித் துள்ளது.

சீமானுக்கு மைக் சின்னம்!
சென்னை, மார்ச்  நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின் னத்தை தலைமை தேர்தல் ஆணையம்  ஒதுக்கிய நிலையில் அதனை ஏற்க மறுத்து, அதற்குப் பதிலாக படகு அல்லது தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்குமாறு அக்  கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில், தேர்தல் ஆணை யம் அதை ஏற்க மறுத்துள்ளது.

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு

சென்னை, மார்ச் 27- நாட்டின் 18-ஆவது மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் 21 மாநி லங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மார்ச் 27-ஆம் தேதியுடன் வேட்புமனுத்  தாக்கல் நிறைவு பெற்றது. இதில், தமிழ்நாட்டில், திமுக, காங்கிரஸ், சிபிஎம்,  சிபிஐ, விசிக, மதிமுக, அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் மற்றும் சுயேட்  சைகள் மொத்தம் 1049-க்கும் மேற்பட்டோர் வேட்புமனுத் தாக்கல் செய்  துள்ளனர். அதிகபட்சமாக கரூர் மக்களவைத் தொகுதியில் 73 பேரும்,  குறைந்தபட்சமாக விழுப்புரம் தொகுதியில் 10 பேரும் வேட்புமனு செய்துள்ளனர்.

கிருஷ்ணசாமிக்கு டிவி சின்னம் மறுப்பு

சென்னை, மார்ச் 27 - தென்காசி தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக கூறி யிருந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தற்போது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்  கே. கிருஷ்ணசாமி, தமது கட்சிக்கு டிவி  சின்னம் ஒதுக்கக்கோரி விண்ணப் பித்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம், டிவி  சின்னத்தை ஒதுக்க முடியாது என்று  கூறி விட்டது. இதையடுத்து, தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தி லேயே போட்டியிட உள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.