சென்னை,
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக இன்று வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. வேட்பாளர் பட்டியலை இன்று மாலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன என்ற விவரங்களை ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர் அண்ணா மற்றும் திமுக முன்னாள் தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் வேட்பாளர் பட்டியலை வைத்து, பின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனிடம் வேட்பாளர் பட்டியலை அளித்து வாழ்த்து பெற்றார். இதைத்தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர்களை பெயர்களை அறிவித்தார்.
திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் பட்டியல் (மக்களவைத் தேர்தல்)
சென்னை வடக்கு - டாக்டர். கலாநிதி வீராசாமி,
சென்னை தெற்கு - தமிழச்சி தங்கபாண்டியன்,
மத்திய சென்னை - தயாநிதி மாறன்,
காஞ்சிபுரம் (தனி) - ஜி.செல்வம்
அரக்கோணம் -எஸ். ஜெகத்ரட்சகன்
வேலூர் - கதிர் ஆனந்த்
தருமபுரி - டாக்டர்.எஸ் செந்தில் குமார்
திருவண்ணாமலை - சி. என் அண்ணாதுரை
சேலம் -எஸ்.ஆர்.பார்த்தீபன்
கள்ளகுறிச்சி - கவுதம சிகாமணி
நீலகிரி (தனி) - ஆ.ராசா
பொள்ளாச்சி - கு.சண்முகசுந்தரம்
திண்டுக்கல் - ப. வேலுச்சாமி
கடலூர் - கதிரவன்
தஞ்சாவூர் - எஸ்.எஸ் பழனிமாணிக்கம்
மயிலாடுதுறை - சே.ராமலிங்கம்
தூத்துக்குடி - கனிமொழி.எம்.பி
தென்காசி (தனி) - தனுஷ்குமார்
திருநெல்வேலி - சா. ஞானதிரவியம்
ஸ்ரீபெரும்பதூர் - டி.ஆர்.பாலு
18 சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள்
ரெம்பூர்- ஆர்.டி சேகர்
பூந்தமல்லி -கிருஷ்ணசாமி
திருப்போரூர் - எஸ்.ஆர். இளையவர்மன்
சோழிங்கர்- அசோகன்
குடியார்த்தம்- எஸ்.காத்தவராயன்
ஆம்பூர்- விஸ்வநாதன்
ஓசூர்-சத்யா
பாப்பிரெட்டிப்பட்டி - மணி
அரூர் - கிருஷ்ணகுமார்
நிலக்கோட்டை - சவுந்திரபாண்டியன்
திருவாரூர்- பூண்டி கலைவாணன்
தஞ்சாவூர்- நீலமேகம்
மானாமதுரை- இலக்கியதாசன்
ஆண்டிப்பட்டி- ஏ.மகாராஜன்
பெரியகுளம்- கே.எஸ் சரவணகுமார்
சாத்தூர் - சீனிவாசன்
பரமக்குடி - சம்பத் குமார்
விளாத்திகுளம்-ஜெயக்குமார்