tamilnadu

img

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜவ்வரிசி ஆலை துவங்க கோரி போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  ஜவ்வரிசி ஆலை துவங்க கோரி போராட்டம்

கள்ளக்குறிச்சி, செப்.19-  கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விளையும் மரவள்ளிக் கிழங்கை பயன்படுத்தி கள்ளக்குறிச்சி பகுதியில் அரசு ஜவ்வரிசி ஆலை உருவாக்க வேண்டும். சர்க்கரை ஆலையில் கிடைக்கும் கரும்பு சக்கையை பயன்படுத்தி திருக்கோவிலூரில் காகித தொழிற்சாலை உருவாக்க வேண்டும். உளுந்தூர்பேட்டையில் தோல் இல்லாத காலணி தொழிற்சாலை கட்டுமான பணியை விரைந்து முடித்து உள்ளூர் இளை ஞர்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும். கல்வித் துறையில் இந்த மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண் கல்லூரியை அரசு உருவாக்க வேண்டும். உளுந்தூர்பேட்டை அரசு கல்லூரிக்கு புதிய கட்டிடம் உளுந்தூர்பேட்டை நகரத்தின் பகுதியில் அமைக்க வேண்டும். திருக்கோவிலூர் அரசு கல்லூரி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், உளுந்தூர்பேட்டை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் இ.சதீஷ் தலைமை தாங்கினார். மத்தியக்  குழு உறுப்பினர் செல்வராஜ், செயலாளர் மு.சிவக்குமார், பொருளாளர் எம்.ஹரிகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் கே.சக்கரவர்த்தி, துணைச் செயலாளர் ஏ.விஷ்ணுகுமார் ஆகி யோர் கோரிக்கையை விளக்கி பேசினர். நிர்வாகிகள் எம்.தீபன்ராஜ், ஏ.பவானி,  வே.சந்திரபோஸ், ப.சின்னராசு, ஏ.ரிச்சர்ட் பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக 33 வது நாளாக (செப்.19) தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே சிஐடியு சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே. நாகராஜன், நிர்வாகிகள் கே. காங்கேயன், சிவராஜ், முரளி, பாலாஜி, சரவணன், கமலக்கண்ணன், சிபிஎம் நிர்வாகிகள் எம். பிரகலநாதன், ச. குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.